ADDED : மே 18, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் இந்தியா பாக் போரில் வெற்றி கண்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மூவர்ணக் கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது.
பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன் முன்னிலையில் வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்
நரசிங்க பெருமாள், மாநில விவசாய அணி துணைத் தலைவர் எஸ்.ஆர். தேவர், மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிராஜா, மாவட்டத் துணைத் தலைவர் நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.