ADDED : ஆக 18, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் பா.ஜ.,வினர் ஹர் கர் திரங்கா யாத்திரை மேற்கொண்டனர்.
நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் சுகனேஸ்வரி, கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், சிதம்பரம், மாவட்ட செயலாளர் ராஜா, ஒ.பி.சி., அணி மாநில நிர்வாகி நாகேஸ்வரன், மாநில இளைஞர் அணி ஆதித்யா, மாவட்ட இளைஞர் அணி கவுதம் கலந்து கொண்டனர்.
பொது செயலாளர் சுப்புகாளை நன்றி கூறினார்.
