/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரஜினி மன்றத்தினர் வருகையால் பா.ஜ.,வின் பலம் அதிகரிப்பு
/
ரஜினி மன்றத்தினர் வருகையால் பா.ஜ.,வின் பலம் அதிகரிப்பு
ரஜினி மன்றத்தினர் வருகையால் பா.ஜ.,வின் பலம் அதிகரிப்பு
ரஜினி மன்றத்தினர் வருகையால் பா.ஜ.,வின் பலம் அதிகரிப்பு
ADDED : மார் 14, 2024 11:40 PM
திருப்புத்துார் : சிவகங்கை மாவட்ட ரஜினி மன்றத்தினரின் வருகையால் பா.ஜ., வின் அடிப்படை தொண்டர்கள் கட்டமைப்பிற்கு பலம் சேர்ந்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2019 லோக்சபா தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.,வில் அமைப்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. கடந்த தேர்தலில் 50 சத வீத ஓட்டுச்சாவடிகளில் தான் பா.ஜ.,வால் நிர்வாகிகளை நியமிக்க முடிந்தது. தற்போது மாவட்டத்தின் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குழு அமைத்து விட்டது.
கடந்த ஆண்டில் தேசிய தலைவர், மாநிலத்தலைவர், மத்திய அமைச்சர்களின் வருகை என்று கட்சி தொண்டர்கள் 'சுறுசுறு'ப்பாக வைக்கப்பட்டனர். இதைப்பார்த்த மற்ற கட்சியினரும் ஆர்வமாக பா.ஜ.,வில் சேரத்துவங்கினர்.
இதன் பிரதிபலிப்பு சிவகங்கையிலும் உண்டு. திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.கல்லுாரி கல்விக்குழும துணைத் தலைவரும், சிவகங்கை மாவட்ட ரஜினி மன்ற செயலாளராக இருந்த நா.ராமேஸ்வரன், அண்மையில் முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார்.
நேற்று பா.ஜ.,வின் மாவட்டத் தலைவர் சத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள் மன்றச் செயலாளர் ராமேஸ்வரனை சந்தித்து கட்சி பணிகள் குறித்து பேசியுள்ளனர்.
சிவகங்கை தொகுதியில் தற்போது ரஜினி மன்ற வருகையால் அதன் அடிப்படை தொண்டர் கட்டமைப்பு மேலும் வலுவடையும் என்று கட்சியினரே கருதுகின்றனர்.

