/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொதுப்பாதை கோரி தர்ணா மில் முன் முற்றுகை
/
பொதுப்பாதை கோரி தர்ணா மில் முன் முற்றுகை
ADDED : ஜன 03, 2024 06:20 AM

காளையார்கோவில்: காளையார்கோவிலில் காளீஸ்வரா மில்லிற்கு சொந்தமான (மத்திய அரசு நிறுவனம்) இடத்தை திருநகர் மக்களின் பொது பாதைக்கு விட வலியுறுத்தி, மில் முன் அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருநகரில் 2,500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மதுரை - தொண்டி ரோட்டில் இருந்து திருநகர் வரை 102 மீட்டர் நீள, 7.6 மீட்டர் அகல பாதை பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.அதிகளவில் வாகனங்களும் செல்கின்றன. இந்த பாதை செல்லும் இடம் காளையார்கோவில் காளீஸ்வரா மில்லுக்கு (மத்திய அரசு நிறுவனம்) சொந்தமானதாக இருப்பதால், அவர்களது இடத்தை வேலி அமைத்து பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினர்.
இதையடுத்து திருநகர் மக்கள் நேற்று மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு இந்த பொது பாதையை நிரந்தரமாக வழங்க வலியுறுத்தி, காளீஸ்வரி மில்லுக்கும் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் (அ.தி.மு.க.,), ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., (இந்திய கம்யூ.,) குணசேகரன், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது, முற்றிலும் மில்லுக்கு சொந்தமான இடம் என்பதால் அதை கைப்பற்ற முயற்சிக்கிறோம். திருநகர் மக்கள் பாதைக்கு இடம் விடுமாறு கேட்டு, மில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தால், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்போம், என்றனர்.