/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
/
சிவகங்கை நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
சிவகங்கை நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
சிவகங்கை நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
ADDED : ஜன 07, 2025 04:45 AM

சிவகங்கை,: சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைநகரான சிவகங்கை நகராட்சி தற்போது 6.97 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது. 27 வார்டுகளிலுள்ள மக்கள் தொகை 48,495 . நகராட்சி விரிவாக்கம் காரணமாக அருகில் உள்ள காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.
காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட 8.60 சதுர கிலோ மீட்டரில் உள்ள கிராமங்கள் மற்றும் வாணியங்குடி ஊராட்சியில் 14.37 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள கிராமங்களை இணைத்து, ஒட்டு மொத்தமாக 39.94 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிவகங்கை நகராட்சியை தரம் உயர்த்தி, மக்கள் தொகை 83,366 ஆக அதிகரிக்க செய்ய முடிவு செய்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை: இந்நிலையில் சிவகங்கை நகராட்சியுடன் இணைப்பதற்கு காஞ்சிரங்கால் மற்றும் வாணியங்குடி ஊராட்சி மக்கள்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நகராட்சியுடன் இணைத்தால் வேலை உறுதி திட்ட பணி, விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறும். ஏற்கனவே சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் உட்பட அனைத்து திட்டங்களும் முழுமையடையாத நிலையில், இவ்விரு ஊராட்சிகளையும் இணைத்தால் எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காது என தெரிவித்து நேற்று இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த கிராமத்தினர் சிவகங்கையில், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை தாசில்தார்சிவராமன், எஸ்.ஐ., சஜூ ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, மனுவை கலெக்டர் ஆஷா அஜித்திடம் வழங்க அழைத்து சென்றனர். இந்த மனுவை அரசுக்கு பரிந்துரை செய்வதாக கலெக்டர் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

