நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த சேகரிப்பு முகாம் நடந்தது. காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் அருள்தாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர்.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், டி.எஸ்.பி., பார்த்திபன் துவக்கி வைத்தனர். மாவட்ட தலைவர் ரபீக் முகமது, மாவட்ட செயலாளர் அப்துல்சித்திக், பொருளாளர் இஸ்மாயில், துணை செயலாளர் சிகாபுதீன், நகர தலைவர் உமர் பங்கேற்றனர்.