ADDED : செப் 25, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அம்மையப்பர் கார்மென்ட்ஸ் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
அம்மையப்பர் கார்மென்ட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் மேலாளர் மதிக்குமார் தலைமையில் 62 பணியாளர்கள் ரத்ததானம் வழங்கினர்.
மருத்துவக் கல்லுாரி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன், அரிமா சங்க பொருளாளர் ராஜ்குமார், முத்துப்பாண்டியன் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
