ADDED : நவ 22, 2026 04:25 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: காளையார்கோவிலில் ரோட்டரி கிளப் ஆப் காளையார்கோவில், சுப்ரீம் நகர் வர்த்தக சங்கம், சரஸ்வதி விகாஸ் வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.
தலைவர் வின்சென்ட் சார்லஸ் தலைமை வகித்தார். தாளாளர் சேகர், வர்த்தக சங்கத் தலைவர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தனர். ரோட்டரி கிளப் செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். சேர்மன் பெர்க்மான்ஸ், இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் தெய்வீக சேவியர், அருள் ஜெயசிங் பேசினர். டாக்டர் முஜப்பர் கான் தலைமையில் டாக்டர்கள் குழு ரத்த தான முகாமை நடத்தினர். 38 பேர் ரத்ததானம் வழங்கினர். பள்ளி செயலாளர் வீரபாண்டி நன்றி கூறினார்.
