/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஜன.27ல் புத்தக கண்காட்சி
/
சிவகங்கையில் ஜன.27ல் புத்தக கண்காட்சி
ADDED : ஜன 18, 2024 05:57 AM
சிவகங்கை : சிவகங்கையில் ஜன., 27 முதல் பிப்., 6 வரை நடக்கும் புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியில் 118 ஸ்டால்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
சிவகங்கை மன்னர்மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஆண்டுதோறும் ஜன., யில் புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி மாவட்ட நிர்வாகம்,பபாசி புத்தக நிறுவனம் சார்பில் நடைபெறும். ஜன., 27 அன்று மாலை புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி துவங்குகிறது.
தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். இங்கு, 118 ஸ்டால்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இந்த ஸ்டால்களில் பல்வேறு பதிகத்தார் சார்பில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
அந்தந்த புத்தகங்களுக்கு பதிப்பகத்தார்சார்பில் தள்ளுபடி வழங்கப்படும். காலை முதல் மாலை வரை புத்தக விற்பனையும் மற்றும் அதை தொடர்ந்து அறிவியல் கண்காட்சி, போக்குவரத்து விதிமுறைகள் கண்காட்சி இடம் பெறும். தமிழக அரசின் சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி வைக்கப்படும்.
அரங்கில் கவிதை, இலக்கியம், சாதனையாளர் வரலாறு, பொது அறிவு வினா விடை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் புத்தகம், சமையல், மருத்துவ கல்லுாரி பாடபுத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் மாலை கண்காட்சி அரங்கில் சிறப்பு பேச்சாளர்கள் சொற்பொழிவு, பட்டிமன்றம், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.
புத்தக திருவிழா மற்றும்கண்காட்சிக்கான ஏற்பாட்டியனை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.