/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் புத்தக கண்காட்சி பபாசி, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
/
சிவகங்கையில் புத்தக கண்காட்சி பபாசி, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
சிவகங்கையில் புத்தக கண்காட்சி பபாசி, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
சிவகங்கையில் புத்தக கண்காட்சி பபாசி, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
ADDED : பிப் 04, 2025 05:10 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பபாசி சார்பில்புத்தக கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பிப்.,21 முதல் மார்ச் 2 வரை நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்தி, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, புத்தக பரிசு, கலைநிகழ்ச்சி நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஜன.,யில் நடப்பதாக இருந்த புத்தக கண்காட்சி, பொங்கல் விடுமுறை, முதல்வர்ஸ்டாலின் வருகைபோன்ற காரணத்தால் புத்தக கண்காட்சியை பிப்.,21 முதல் மார்ச் 2 வரை நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
மாவட்ட நிர்வாகம், பபாசியும் இணைந்து, மன்னர் பள்ளி வளாகத்தில் 110 ஸ்டால் அமைத்து, போட்டி தேர்வுக்கான புத்தகம், துறை ரீதியான வளர்ச்சி பணிகள் குறித்த விளக்க கண்காட்சி, வரலாற்று, இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் பல லட்சம் வரை விற்கப்பட உள்ளன.
புத்தக கண்காட்சிக்கான பணிகளை கலெக்டர் தலைமையில் மாவட்ட அதிகாரிகள், பபாசி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

