நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி கிளை தலைவர் தேவதாஸ் தலைமையில் நடந்தது.பொன்னையா,செல்வம் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்றார்.மாநில குழு ஜீவசிந்தன் கண்காட்சியை திறந்து வைத்தார்.
பொறியாளர் கண்ணன் புத்தக விற்பனையை துவக்கி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் தமிழ்கனல், மாவட்ட தலைவர் சிபூ, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் பாரதி தங்கராஜ் நன்றி கூறினார்.

