
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தக திருவிழா நேற்று ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். கலெக்டர் ஆஷா அஜித் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
மூத்த வழக்கறிஞர்கள் மோகனசுந்தரம், அழகர்சாமி, இளங்கோவன், சிவக்குமார், வழக்கறிஞர் சங்க செயலாளர் சித்திரைசாமி, பொருளாளர் வால்மீகநாதன் பேசினர். இணைச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.