/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஜன., 27ல் புத்தக திருவிழா
/
சிவகங்கையில் ஜன., 27ல் புத்தக திருவிழா
ADDED : ஜன 04, 2024 02:23 AM
சிவகங்கை: சிவகங்கையில் ஜன., 27 முதல் பிப்., 6 வரை புத்தக திருவிழா நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஜன., 27 காலை புத்தக திருவிழா துவக்கப்படும். தினமும் காலை முதல் இரவு வரை நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் பங்கேற்கும் பல்வேறு தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறும்.
புத்தக திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை சொற்பொழிவு, சிந்தனை பட்டிமன்றம், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறும்.
குழந்தைகளுக்கான திரைப்பட அரங்கு, அறிவியல் கண்காட்சிகள், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி தேர்வு நிகழ்ச்சி நடைபெறும், என்றார்.