ADDED : ஜன 02, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லல்: கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் 25 எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய 'மனிதம் நுால்' வெளியீட்டு விழா நடந்தது.
செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ராசு வரவேற்றார். நுால் தொகுப்பாசிரியர் மகாபிரபு எழுதிய பட்டாசு என்ற கவிதை, மகாராஜா என்ற நுண்கதை நுாலும் வெளியிடப்பட்டது.
புலவர் ஆறுமெய்யண்டவர், புலவர் காளிராஜா, தமிழ்க்கனல், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் சேவற்கொடியோன், மெய்யாத்தாள், உஷா, தலைமை ஆசிரியர்அழகப்பன், தலைமை ஆசிரியை சாந்தி, நல்லாசிரியர் வனிதா, ஆசிரியர் துஷ்யந்த் சரவணராஜ், விஞ்ஞானி அசோக், உதவி பொறியாளர் பிரேம் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

