ADDED : ஜூன் 23, 2025 07:33 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் தமிழவையம் சார்பில் ‛மஞ்சனத்தி நுால்' அறிமுக விழா நடந்தது.
சகுபர்நிசா பேகம் வரவேற்றார். மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். வித்யா கணபதி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் காளிராசா நுால் அறிமுகம் செய்தார். துஷ்யந்த் சரவணராஜ் மதிப்புரை வழங்கினார். கதிரவன் சிறப்பு வகித்தார். ஆசிரியர் நாகேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி, தமிழ் சங்க தலைவர் முருகானந்தம், லயன்ஸ் தலைவர் ரமேஷ்கண்ணா, தமிழ் சங்க செயலாளர் பாண்டியராஜன், ஆசிரியர் பஞ்சுராஜ், சுந்தரேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
