ADDED : மார் 24, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:கவிதைகள் தின விழாவை முன்னிட்டு பூக்கள் சுட பூத்த பூ கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் சங்க தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். புலவர் காளிராசா, வேலுநாச்சியார் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, முத்துப்பாண்டியன், கவிஞர் உமாபதி முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். தமிழ் சங்க முன்னாள் தலைவர் பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், தமிழாசிரியர் இளங்கோ, வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன், நடுவர் அன்புத்துரை, கவிஞர் இளவரசி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன், லயன்ஸ் சங்க தலைவர் ரமேஷ் கண்ணன் பங்கேற்றார். நுால் ஆசிரியர் சரவணப்பாண்டி ஏற்புரை நிகழ்த்தினார். கிளை பொருளாளர் சுபா நன்றி கூறினார். ////
