ADDED : ஏப் 01, 2026 05:25 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கையில் ‛வாளுடன் ஆட்சி வேலுநாச்சி' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் சங்க தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட ஆலோசகர் பகீரத நாச்சியப்பன் நுாலை வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பெற்றார்.
வங்கி முன்னாள் அலுவலர் அனந்தராமன், அரசு வழக்கறிஞர் பிரபாகர்,ஆசிரியர் இளங்கோ, ராணி வேலுநாச்சியார் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, பேராசிரியர் கற்பகம், செஞ்சிலுவை சங்க துணை தலைவர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தலைவர் சுந்தரமாணிக்கம், வழக்கறிஞர் சங்க செயலாளர் சித்திரை சாமி, கவிஞர் ராஜநாதன் பேசினர். நுாலாசிரியர் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஏற்புரை வழங்கினார்.
