ADDED : ஏப் 14, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு காலங்கள் மாறும் காயங்கள் மாறாது என்கிற நுால் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்தது. கிளைத் தலைவர் பஞ்சுராஜ் தலைமை வகித்தார். சிங்கம்புணரி கிளைச்செயலாளர் பொன் பால்துரை முன்னிலை வகித்தார்.
சிவகங்கை கிளைச்செயலாளர் கமல்ராஜன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் முத்துநிலவன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன், சத்தியசீலன் எழுதிய காலங்கள் மாறும் காயங்கள் மாறாது என்ற நுாலை வெளியிட்டனர். புனித மைக்கேல் பதின்மப் பள்ளி முதல்வர் ஜெயந்தி நுாலை பெற்றுக்கொண்டார். மாவட்டத் தலைவர் சிபு, மாவட்டச் செயலாளர் அன்பரசன், மாவட்டப் பொருளாளர் பாலா பேசினர். சிங்கம்புணரி கிளைத்தலைவர் கலையரசன் நன்றி கூறினார்.
