ADDED : ஆக 16, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஆக.17-
மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஒய்வு பெற்ற
துணை ஆட்சியர் மணிவேலனின், பத்து
நிமிடம் பேசிப்பார் கவிதை தொகுப்பு நுால் வெளியிட்டு விழா கிளைத்தலைவர்
தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்றார்.
பட்டிமன்ற பேச்சாளர் திருமாவளவன்
நூலை வெளியிட ஆம்ஸ்ட்ராங் பன்னாட்டு
நிறுவன உதவி மேலாளர் கார்த்திக் பெற்றுக்கொண்டார். த.மு.எ.க.ச., மாநிலக்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஜீவசிந்தன், ஜாகீர் உசேன்
கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், எஸ்.ஐ., தேவமாறன், தேன்மொழிஅப்பாவு, ரத்தின
வள்ளிமுத்துச்சாமி பேசினர்.பொருளாளர் பாரதிதங்கராஜ் நன்றி கூறினார்.
