ADDED : ஆக 24, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.25-சிவகங்கையில் முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது. கிளை தலைவர் கொம்புவேலு தலைமை வகித்தார்.
செயலாளர் பேராசிரியர் பிரசன்னா வரவேற்றார். ’ஜீரோ ஹீரோவான கதை’ நுாலின் பிரதியை நவாஸ் பாபு வெளியிட, மதுரை பொருளாதார மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜமால் பெற்றார். பேராசிரியர் தங்கமுனியாண்டி நுால் அறிமுக உரை ஆற்றினார். கலைஇலக்கிய பெருமன்ற கிளை செயலாளர் பாரதி அன்பன் யுவராஜ், பள்ளி வாசல் இமாம் முகமது மன்சூர் ஹசைன் வாழ்த்துரை வழங்கினர். நுாலாசிரியர் பேராசிரியர் கலீல் அகமது ஏற்புரை ஆற்றினார்.
