ADDED : டிச 10, 2024 05:18 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் மனோஜ் குமார் சர்மா தலைமை வகித்தார். எழுத்தாளர் ஈஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவகல்லுாரி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினர்.
மாவட்ட நுாலக அலுவலர் கனகராஜன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.
மாணவர்களுக்கு நுாலக உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
