நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கல்லலில் எழுத்தாளர் மகாபிரபுவின் சவாலே சமாளி நுால் வெளியீட்டு விழா நடந்தது. அழகப்பா அரசு கல்லுாரி தமிழ் உயராய்வு மைய முன்னாளர் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
அறிவொளி இயக்க மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். முத்துமாரி, இளஞ்செழியன், ஆசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினர். ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் மெய்யாண்டவர் வெளியிட கல்லல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கீதா, சாந்திராணி மெட்ரிக் பள்ளி தாளாளர் ரெக்சி பெற்றனர்.