ADDED : ஏப் 13, 2026 06:40 PM
திருப்புத்துார்:திருப்புத்துார் தொகுதியில் வாக்காளர்களுக்கு ‛பூத் சிலிப்' வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது.
திருப்புத்துார் தொகுதியில் 368 ஓட்டுச்சாவடிகளில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 904 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் அலுவலர் சிவபாலன் நேற்று மாலை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அளவிலான அலுவலர்கள் பூத் சிலிப் களை வாக்காளர்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கத் துவங்கியுள்ளனர்.
தினசரி 20 சதவீத வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள்,முதியவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்யும் முறை துவங்கியது. இதற்காக 18 குழுவினர் அவர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டுப்பதிவை செய்து வருகின்றனர்.
