ADDED : நவ 27, 2024 08:20 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை ; சிவகங்கை 21 நுாற்றாண்டு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
மாணவ, மாணவியர் இருபாலருக்கும் தனித் தனியே 14,17,19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உடல் எடையின் அடிப்படையில் போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழுடன் பரிசும் வழங்கப்பட உள்ளது. முதலிடத்தை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவில் ஜனவரியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
