ADDED : ஏப் 27, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : பள்ளி கல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளிலுள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு குத்துசண்டை பயிற்சி முகாம் பயர் ஸ்டோர்ம் பயிட் கிளப் குத்துசண்டை பயிற்சி நிலையத்தில் நடந்தது.
மாவட்ட குத்துசண்டை பயிற்சியாளர் குணசீலன், விழுப்புரம் மாவட்ட சிறப்பு பயிற்சியாளர் பாலமுருகன், பயிற்சியாளர் சித்ராவால் வகுப்பு நடத்தப்பட்டது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். சிறப்புடன் பங்காற்றிய மாநில மற்றும் மண்டல அளவில் குத்துசண்டையில் சாதனை புரிந்த மாணவர்கள், பயிற்சியாளருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

