/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் கம்பி விழுந்து சிறுவன் பலி ; உறவினர்கள் உடலுடன் மறியல்
/
மின் கம்பி விழுந்து சிறுவன் பலி ; உறவினர்கள் உடலுடன் மறியல்
மின் கம்பி விழுந்து சிறுவன் பலி ; உறவினர்கள் உடலுடன் மறியல்
மின் கம்பி விழுந்து சிறுவன் பலி ; உறவினர்கள் உடலுடன் மறியல்
ADDED : நவ 02, 2024 09:04 AM

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மின் கம்பி விழுந்ததில் பரிதாபமாக பலியானார்.
இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் கார்த்திக் 12, இவர் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் ஜீவா நகர் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் உள்ள அங்கன்வாடி அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து கார்த்திக் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெரும்பச்சேரி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட போது பரமக்குடி-நயினார் கோயில் ரோட்டில் பெரும்பச்சேரி பஸ் ஸ்டாப் அருகே அவரது உடலை வைத்து உறவினர்களும் கிராம மக்களும் இறந்து போன சிறுவனின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,
உயிர்பலிக்கு காரணமான மின் கம்பங்களையும், சேதமடைந்த மின் கம்பிகளையும் உடனடியாக மாற்ற வேண்டும், மின் கம்பங்களையும், கம்பிகளையும் இதுவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இளையான்குடி தாசில்தார் முருகன் மின்வாரிய அதிகாரி காமாட்சி மற்றும் போலீசார் ஆகியோர் கிராம மக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.