பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராமையா மகன் நாராயணன் 47. இவர் கணினிப் பொறியாளராக சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது சொக்கநாதபுரம் வீட்டில் நாராயணன் பெரியம்மா அழகம்மை உள்ளார். பிப்.29 அன்று அழகம்மை சென்னை சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை சொக்கநாதபுரம் வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. யாரோ வீட்டின் கிரில்கேட்டை உடைத்து உள்ளே சென்று இரும்பு பீரோக்களை உடைத்து 13 பவுன் தங்கநகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். நாராயணன் மதகுப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
வெள்ளிக்கவசங்கள் திருட்டு
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே மருதங்குடி அய்யனார் கோயிலில் வெள்ளிக்கவசங்கள், அரிவாள்கள் திருடு போனது.
கல்லல் ஒன்றியம் மருதங்குடியில் ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. பரிவார தெய்வங்கள் நிறைந்த இக்கோயிலில் ஒரு கால பூஜையுடன் வழிபாடு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காலை 9:00 மணி அளவில் பூசாரி கருப்பையா கோயிலை திறந்து உள்ள சென்ற போது. பள்ளியறை கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு சுவாமிகளுக்கு சார்த்த வைக்கப்பட்டிருந்த 5 வெள்ளிக் கவசங்கள் மற்றும் 9 அரிவாள்கள் திருடு போனது தெரியவந்தது. நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
குண்டாசில் இருவர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் ராமு மகன் ராசையா என்ற மணிகண்டன் 29, ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதிக்கோட்டை சதுரகிரி மகன் துரைசிங்கம் 20. இருவரும் மானாமதுரையில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் உள்ளனர். கலெக்டர் ஆஷா அஜித் இருவர் மீதும் தடுப்பு காவல் ஆணை பிறப்பித்துள்ளார். ராசையா, துரைசிங்கம் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

