தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : பிப் 10, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் துாய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரி-ன் உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா மற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

சிவகங்கையில் நடந்த விழாவில் சேர்மன் துரைஆனந்த் 195 துாய்மை பணியாளர்களுக்கு திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவி களை வழங்கினார். கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

மேலாளர் மல்லிகா, சுகாதார அலுவலர் நல்லுசாமி, உதவி பொறியாளர் அன்புசெழியன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார், கவுன்சிலர் ஜெயகாந்தன், ராமநாதன் கலந்து கொண்டனர்.

காரைக்குடி: காரைக்குடியில் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமையேற்றார். அமைச்சர் பெரிய கருப்பன் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். துணை மேயர் குண சேகரன், கமிஷனர் சங்கரன், மாநகர் நல அலுவலர் வினோத் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us