ADDED : அக் 05, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்:சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் சிங்காரம் மகன் பிரேம்குமார் 45. இவர் குடும்பத்தினருடன் புதுச்சேரியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
எஸ்.புதூரில் உள்ள இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாருக்கு தகவல் கொடுத்தனர். பிரேம்குமார் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு 14 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. பிரேம்குமார் புகாரின்படி போலீசார் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.