/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் உண்டியலை உடைத்த கொத்தனார் கைது
/
கோயில் உண்டியலை உடைத்த கொத்தனார் கைது
ADDED : பிப் 07, 2024 12:07 AM

தேவகோட்டை : தேவகோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன் கொத்தங்குடி இடையன்காளியம்மன் கோயிலில் ரூ. 10 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் திருடி போனது. சிசிடிவி கேமிராவில் பதிவு இருந்தும் இன்று வரை குற்றவாளிகள் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு கண்ணங்கோட்டையில் கொலையின் போது போலீஸ் பாதுகாப்பு இருந்த நிலையில் அருகில் இருந்த ஆற்றங்கரை நாச்சியம்மன் கோயிலில் உண்டியல், ஒரு மாதத்திற்கு முன்பு நல்லாங்குடி அய்யனார் கோயில், அடசிவயல் கோயில் உட்பட பல கோயில்கள் உண்டியல் திருட்டு நடந்தும் குற்றவாளிகள் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஈகரையில் உள்ள ஆற்றங்கரை நாச்சியம்மன் கோயிலில் சிசி டிவி கேமராவை மறைத்தும், உடைத்தும் ஒரு நபர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றார். தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையில் கொத்தனார் வேலை பார்த்து வந்த வரை பிடித்து விசாரித்ததில் திருடியதை ஒப்புக் கொண்டார். விசாரணையில் மதுரை மாவட்டம் மேலுார் அருகே பழையபட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் கணேஷ் 37 என்று தெரியவந்தது.

