ADDED : ஆக 27, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி, ஆக.28-
இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் அஜித்குமார் 28, கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர் பகைவரை வென்றான் கிராமத்தில் உள்ள கூத்து பெருமாள் கோயில் அருகே உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டை பையில் தற்கொலைக்கு தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து இளையான்குடி போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கடிதம் குறித்து வழக்கு விசாரிக்கின்றனர்.
