/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை-தஞ்சாவூர் ரோட்டில் மந்த கதியில் பாலம் கட்டுமானம் வாகன ஒட்டிகள் அவதி

ADDED : பிப் 16, 2025 10:36 PM

மானாமதுரை,: மானாமதுரை, தஞ்சாவூர் ரோட்டில் பாலம் கட்டுமானப் பணி மந்த கதியிலும், போதிய எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை, தஞ்சாவூர் ரோட்டில் மானாமதுரை நகர் பகுதியில் ரோடு விவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சிறு பாலம் கட்டுவதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
பால வேலை நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளதால் பஸ்களில் இருந்து இறங்குபவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ரோட்டின் அருகிலேயே கட்டுமான பொருட்களை கொட்டி வைத்துள்ளதால் விபத்து அபாயமும் உள்ளது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பால கட்டுமான பணியை விரைவாக நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.