/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் பாலம் பணி இழுபறி
/
நான்கு வழிச்சாலையில் பாலம் பணி இழுபறி
ADDED : பிப் 20, 2026 07:10 AM
கீழடி: நான்கு வழிச்சாலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் பாலப்பணியால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கு, நரிக்குடி சந்திப்பு சாலை, திருப்பாசேத்தியில் படமாத்துார் சந்திப்பு சாலை உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்து நடந்து வருகின்றன.
இதனை தடுக்க இந்த இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து கீழடி விலக்கில் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கியது.
45 மீட்டர் அகலம் கொண்ட சாலை அறுபது மீட்டர் அகலம் கொண்ட சாலையாக மாற்றப்பட்டு 45 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்படும் என்றும் தலா ஏழரை மீட்டர் அகலத்தில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பாலத்தின் கீழ், பக்கவாட்டு பகுதி உள்ளிட்ட இடங்களில் உயர்மின்கோபுர விளக்கு வசதியும் அமைய உள்ளது.
2023ல் நிலம் கையகப்படுத்தப்படுத்தி இரு ஆண்டுகளுக்கு பிறகு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஒரு வருடம் ஆகியும் இன்று வரை பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.கட்டுமான பணிகள் குறித்த எந்த விபர பலகையும் வைக்கப்படவில்லை.
பணிகள் நடைபெறும் இடத்தில் பொறியாளர்கள் உள்பட எந்த அதிகாரிகளும் இருப்பதில்லை. பணிபுரிபவர்களிடம் கேட்டால் தெரியாது என்றே கை விரிக்கின்றனர். பாலம் கட்டுமான பணிக்காக சாலையை ஒட்டி இருபுறமும் ஐந்து அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
கீழடியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுரைக்கு கூலி வேலைக்காக தினசரி டூவீலரில் சென்று திரும்புகின்றனர். சாலையோர பள்ளத்தில் இரவு நேரத்தில் தடுமாறி விழுந்து அடிக்கடி காயமடைந்து வருகின்றனர்.

