/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாடனேந்தலில் பாலம் கட்டும் பணி இழுபறி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
லாடனேந்தலில் பாலம் கட்டும் பணி இழுபறி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
லாடனேந்தலில் பாலம் கட்டும் பணி இழுபறி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
லாடனேந்தலில் பாலம் கட்டும் பணி இழுபறி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜன 15, 2024 12:15 AM
திருப்புவனம், : திருப்புவனம் அருகே லாடனேந்தல் - மணல்மேடு இடையே பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மணல்மேடு, பெத்தானேந்தல், சடங்கி உள்ளிட்ட கிராம மக்கள் திருப்புவனம் வருவதற்கு மடப்புரம் வழியாக 10 கி.மீ., துாரம் சுற்றி வரவேண்டும், இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் என பலரும் மணல்மேடு அருகே வைகை ஆற்றில் இறங்கி நடந்து லாடனேந்தல் வந்து திருப்புவனம் சென்று வந்தனர்.
மணல்மேடு -- லாடனேந்தல் இடையே பாலம் அமைத்தால் மூன்று கி.மீ., துாரம்தான் வரும். எனவே இந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.
நபார்டு வங்கி நிதி 18 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் 374 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும், 17 தூண்களுடனும் பாலம் கட்டுமான பணிகள் 2022 ல் தொடங்கின. ஒன்றரை ஆண்டுகளில் கட்டுமான பணிகள் முடிவடையும் என அறிவித்து இரு ஆண்டுகள் ஆகியும், கட்டுமான பணி முடிவடையவில்லை, இந்த பால கட்டுமான பணியை கலெக்டர் ஆஷா அஜித், தாசில்தார் விஜயகுமார், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சென்ட்ராயன் பார்வையிட்டனர். பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
இது குறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, மணல்மேடு - - பெத்தானேந்தல் இடையே பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியதில் இருந்தே கூலி ஆட்கள் தட்டுப்பாடு, நீர்வரத்து, குறுகலான பாதையில் பொருட்கள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
கடந்த 4 மாதங்களாக வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்ததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை, என்றனர்.