ADDED : மே 06, 2025 06:53 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 5:15 மணிக்கு நகர் மற்றும் பனங்காடி, சாத்தனி, கிளுவச்சி, அல்லுார், வந்தவாசி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சாத்தனி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட மா, பலா, பப்பாளி உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. அத்துடன் மின்கம்பம் ஒன்று முறிந்தது.நேற்று முன்தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் மின் வினியோகத்தை சீரமைத்து வருகின்றனர்.
