/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்சோ வழக்கில் அண்ணன் தம்பிக்கு 5 ஆண்டு சிறை
/
போக்சோ வழக்கில் அண்ணன் தம்பிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஏப் 25, 2025 06:32 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் மகன் துரைப்பாண்டி 48. இவரது தம்பி சின்னபாண்டி 38. இருவரும் கட்டட வேலை செய்வதோடு கிராமங்களில் கேபிள் டிவிக்கு வயர் இழுக்கும் பணி செய்து வருகின்றனர்.
2021 மார்ச் 2ல் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது கேபிள் டிவி வயர் இழுப்பதற்காக சென்றனர். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் பூவந்தி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார்.
குற்றவாளிகள் துரைப்பாண்டி, சின்னபாண்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

