/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆட்டுக்கல்லில் விழுந்து தம்பி கொலை கைதான அண்ணன் வாக்குமூலம்
/
ஆட்டுக்கல்லில் விழுந்து தம்பி கொலை கைதான அண்ணன் வாக்குமூலம்
ஆட்டுக்கல்லில் விழுந்து தம்பி கொலை கைதான அண்ணன் வாக்குமூலம்
ஆட்டுக்கல்லில் விழுந்து தம்பி கொலை கைதான அண்ணன் வாக்குமூலம்
ADDED : டிச 23, 2024 04:53 AM
தேவகோட்டை: தேவகோட்டை கருதாவூரணி கிழக்கு குளக்கால் தெருவை சேர்ந்த நீலமேகம் மகன்கள் ரமேஷ் 43, ராஜ்குமார் 37. இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசிக்கின்றனர். இருவரும் கொத்தனார், பெயிண்டிங் வேலைக்கு செல்கின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு மது அருந்திக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ரமேஷ் தள்ளிவிட்டதில் அவரது தம்பி ராஜ்குமார் கீழே விழுந்து உயிரிழந்தார். தேவகோட்டை போலீசார் ரமேைஷ கைது செய்து விசாரித்தனர்.
அடிக்கடி வீட்டிற்கு வந்து என் அம்மாவை ராஜ்குமார் திட்டுவார். நேற்று முன்தினம் மதியம் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, என் அம்மாவை திட்டினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜ்குமாரை கீழே தள்ளிவிட்டதில், ஆட்டுக்கல் மீது விழுந்து பலியானார் என தெரிவித்துள்ளார்.