
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :  சிவகங்கையில் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 43 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரியமாடு சிறிய மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடந்தது. முதலாவதாக நடந்த பெரியமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
பெரிய மாடுகளுக்கான எல்லையாக 7 மைல் துாரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் துாரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடந்தது.
இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும்  பரிசு வழங்கப்பட்டது.

