/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
/
அ.காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஜூலை 25, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் பெரியபாலம் கொக்கன் கருப்பர் கோயில் ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
தமிழக முன்னாள் தடயவியல் துறை இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பூமணி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து முன்னிலை வகித்தனர்.
பெரிய மாடு பிரிவில் 9, சின்ன மாடு பிரிவில் 16 ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.