ADDED : ஜூலை 10, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:பாகனேரியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பாகனேரி மதகுபட்டி, சிவகங்கை சாலையில் நடந்த இந்த போட்டியில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
பெரிய மாடு பிரிவில் 14 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 22 ஜோடிகளும், இரு சுற்றுகளாக நடந்த சிறிய மாடு பிரிவில் 28 ஜோடியும், கரிச்சான் பிரிவில் 24 ஜோடிகள் என மொத்தம் 88 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.