ADDED : ஜூலை 13, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் ஆடி விழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 53 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
பந்தயம் பையூர் விலக்கில் இருந்து நடத்தப்பட்டன. 7 மைல் தூரத்திற்கான பெரியமாடு பிரிவில் 19 வண்டிகளும், 6 மைல் தூரத்திற்கான சின்னமாடு பிரிவில் 34 வண்டிகளும் பங்கேற்றன. 17 வண்டிக்கு ஒரு சுற்று வீதம் போட்டி நடத்தினர். மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த வண்டிகள் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை வென்ற மாடு வண்டி உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசு வழங்கினர்.