/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் மழை வேண்டி எருதுகட்டு
/
சிங்கம்புணரியில் மழை வேண்டி எருதுகட்டு
ADDED : அக் 16, 2024 04:14 AM
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் மழை வேண்டி எருதுகட்டு விழா நடத்தப்பட்டது.
இங்குள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் கோயிலுக்கு புரட்டாசியில் கிராமத்தார்கள் புரவி எடுத்து வழிபடுவது வழக்கம்.இந்தாண்டு அக். 13ஆம் தேதி புரவி எடுப்பு விழா நடந்தது. தொடர்ந்து அக். 14ஆம் தேதி இரவு எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக சேவுகப்பெருமாள் கோயிலுக்கு பக்தர்களால் நேர்ந்து விடப்பட்ட காளைகளில் வெள்ளை நிறக் காளை பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்டது. அக்காளையின் கால்களில் 4 சலங்கைகள் மாட்டப்பட்டு வீரையா கோயில் மரத்தடியில் கட்டிவைக்கப்பட்டது. காளைக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பாரம்பரிய முறைப்படி வடத்திலிருந்து காளை அவிழ்த்து விடப்பட்டு இளைஞர்கள் சிறுவர்கள் அதை விரட்டிச் சென்றனர்.
அப்போது காளையின் கால்களில் இருந்து 3 சலங்கைகள் விழுந்தது. 3 எண்ணிக்கையில் சலங்கைகள் விழுந்தால் அந்தாண்டு மூன்று போகம் சாகுபடி இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.