/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எரிக்கப்படும் குப்பை சுற்றுலா பயணிகள் அவதி
/
எரிக்கப்படும் குப்பை சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : மே 16, 2025 03:19 AM
பிரான்மலை: பிரான்மலையில் தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் பிரான்மலை ஊராட்சியில் தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை வேங்கைப்பட்டி ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. ஊருக்குள் நுழையும் போதே துர்நாற்றம், புகை மண்டலத்தோடு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் போராடி முகம் சுளிக்கின்றனர். பிரான்மலையில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊருக்கு வெளியே அதற்கான கிடங்கில் முறையாக பராமரித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.