/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் அருகே பஸ்கள் மோதல்; : காரைக்குடி பஸ் டிரைவர் மீது வழக்கு; இறந்தவர்கள் உடல் ஒப்படைப்பு
/
திருப்புத்துார் அருகே பஸ்கள் மோதல்; : காரைக்குடி பஸ் டிரைவர் மீது வழக்கு; இறந்தவர்கள் உடல் ஒப்படைப்பு
திருப்புத்துார் அருகே பஸ்கள் மோதல்; : காரைக்குடி பஸ் டிரைவர் மீது வழக்கு; இறந்தவர்கள் உடல் ஒப்படைப்பு
திருப்புத்துார் அருகே பஸ்கள் மோதல்; : காரைக்குடி பஸ் டிரைவர் மீது வழக்கு; இறந்தவர்கள் உடல் ஒப்படைப்பு
ADDED : டிச 02, 2025 04:30 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கும்மங்குடியில் நேற்று முன்தினம் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர், 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாயினர். காரைக்குடியில் இருந்து பஸ்சை ஓட்டி வந்த அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து காரைக்குடிக்கு (டி.என்.39 என் 0198) அரசு பஸ் சென்றது. எதிர் திசையில் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு (டி.என்.,63 என் 1776) அரசு பஸ் சென்றது. திருப்பூர் பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு பால்பாண்டி மகன் சென்றாயன் 36, ஓட்டினார். காரைக்குடி பஸ்சை திருப்புத்துார் கள்ளிப்பட்டு சுதாகர் 36, ஓட்டினார். இரண்டு பஸ்களும் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கும்மங்குடி சமத்துவபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் திருப்பூர் பஸ் டிரைவர் சென்றாயன், சிங்கம்புணரி எஸ்.எஸ்.நகர் முத்துமாரி 60, இளையான்குடி ராஜா மனைவி கல்பனா 36, அரியக்குடி மல்லிகா 61, சென்னை லாவண்யா 50, துவரங்குறிச்சி பழையப்பாளையம் ராமன் மகள் டயானா 17, தேவகோட்டை இலங்கை முகாம் குணலட்சுமி 55, மேலுார் சொக்கலிங்கபுரம் செல்லம் 55, முத்துலட்சுமி, புதுக்கோட்டை மாவட்டம் அம்மன்குறிச்சி தெய்வானை 52, திண்டுக்கல் வெற்றி செல்வி 60 பலியாயினர். முத்துமாரி, கல்பனா, உடல்கள் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சென்றாயன், மல்லிகா, லாவண்யா, டயானா உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், குணலட்சுமி, செல்லம், தெய்வானை, முத்துலட்சுமி, வெற்றிசெல்வி உடல்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இறந்தவர்களின் உடல்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழக அரசு சார்பில் முதல்வர் நிவாரண தொகையாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.
காரைக்குடி பஸ்சை ஓட்டிய டிரைவர் சுதாகர் அதிகவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து மோதியதில் இரண்டு பஸ்களிலும் சென்ற 11 பேர் இறந்துவிட்டதாகவும் 30 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிராவயல் குரூப் வி.ஏ.ஓ., வினோத்குமார் கொடுத்த புகாரில் திருப்புத்துார்டி.எஸ்.பி., செல்வக்குமார் விசாரித்து வருகின்றார். சுதாகர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

