ADDED : ஜன 15, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் இருந்து பெரியகாரை கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டது.
காரைக்குடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பங்கேற்றனர். இந்த பஸ் தேவகோட்டையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, கண்ணங்கோட்டை, எழுவன்கோட்டை, புதுக்கோட்டை, கள்ளிக்குடி வழியாக செல்லும். கிளை மேலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.