/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கட்டுமான பணிக்கு பஸ் ஸ்டாண்ட் மூடல் ரோட்டில் நிற்கும் பஸ்களால் அவதி

ADDED : செப் 30, 2024 04:52 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்காக மூடப்பட்டநிலையில், தொண்டி ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இங்கு ரூ.1.95 கோடியில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு மார்ச் 8ல் துவங்கியது. ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை. இதனால், தினமும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் 18 கடைகள், நுழைவு வாயில் ஆர்ச், தரைதளம், கழிப்பிடம் கட்ட வேண்டும். ஒப்பந்ததாரர் பணியை முடிக்காததால், விரைந்து முடிக்கும் நோக்கில் தற்போது பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டன.
இதனால், தொண்டி ரோட்டில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைந்து பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்க வேண்டும்.