ADDED : ஜன 02, 2025 05:03 AM
காரைக்குடி: காரைக்குடியில் தொழில் வணிகக் கழக 12வது செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் சாமி திராவிடமணி தலைமை வகித்தார். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணப்பன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் காசி விஸ்வநாதன், ராகவன், சத்தியமூர்த்தி, பெரியதம்பி இணைச் செயலாளர்கள் கந்தசாமி, ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காரைக்குடி மாநகராட்சியில் நிறுவன கட்டடங்களை மீண்டும் மீண்டும் அளவெடுத்து ஏற்கனவே விதிக்கப்பட்ட வரி இனங்களின் பாக்கியுள்ளதற்கு நிலுவை கட்டணமாக 6 சதவீதம் கூடுதலாக வரிசுமையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருப்பது வணிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதோடு, மத்திய அரசு வாடகை கட்டடங்களுக்கு புதிதாக 18 சதவீத ஜி.எஸ்.டி.,  வரியாக விதிப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எடுக்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன், இதனை அரசுக்கு  தெரிவிக்கும் வகையில் காரைக்குடியில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

