ADDED : பிப் 13, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு நடந்தது.
கல்லுாரி தலைவர் எம். சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் கே.சசிக்குமார் முன்னிலை வகித்தார். அசானி காஸ்ட் கன்சல்டன்ட்ஸ் நிறுவன மனித வள மேம்பாடு அலுவலர்கள் ஜெயபாலன், பாலமுருகன் நேர்முகத் தேர்வை நடத்தினர். சிவில் மூன்றாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு, நேர் காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.