ADDED : பிப் 27, 2026 07:02 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடந்தது.
முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். துாத்துக்குடி ஸ்பிக் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் சிவக்குமார், ஜெயக்குமார் நேர்காணலை நடத்தினர். 40 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.
கோவை எல் அன்ட் டி நிறுவனத்தினரும் நேர்காணல் நடத்தினர். மனிதவள மேம்பாட்டு அலுவலர் பினேஷ் குமார் நடத்திய நேர்காணலில் அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றனர்.
தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விரிவுரையாளர் பாண்டியன், அபினேஷ் ஒருங்கிணைத்தனர்.
