sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பருவ மழைக்கு முன் கண்மாய்கள் துார்வாரப்படுமா: மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

/

பருவ மழைக்கு முன் கண்மாய்கள் துார்வாரப்படுமா: மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

பருவ மழைக்கு முன் கண்மாய்கள் துார்வாரப்படுமா: மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

பருவ மழைக்கு முன் கண்மாய்கள் துார்வாரப்படுமா: மாவட்ட விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 23, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மழை காலம் துவங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்களை தூர்வார வேண்டுமென்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி,திருப்புவனம்,சிங்கம்புணரி, காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை, காளையார் கோயில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் சுமார் 1,400 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. மானாமதுரை, இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏராளமான கண்மாய்கள் துார்வாரப்பட்டன. இந்நிலையில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடிமராமத்து திட்டம் கைவிடப்பட்டதால் கடந்த 3 ஆண்டாக கண்மாய்கள் தூர்வாரப்படாமல் போனது. இதனால், கண்மாய்களில் கருவேல மரங்கள் வளர்ந்து கண்மாய் பகுதிகள் மேடாகி விட்டதினால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கால்வாய்களும் தூர்வாரப்படாமல் உள்ளதால், ஆறு மற்றும் மழைநீர் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் கண்மாய்க்கு சென்று சேருவதிலும் சிக்கல் ஏற்பட்டள்ளது. போதிய மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பாமல் இருப்பதினால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

* கண்மாய் துார்வாரும் பணி அவசியம்:

இது குறித்து தெற்கு கீரனூர் விவசாயி தங்கபாண்டியன் கூறியதாவது: இன்னும் சில மாதங்களில் மழை காலம் ஆரம்பிக்க உள்ளது. கடந்த 3 ஆண்டாக பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய, ஜமீன் கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் கண்மாய் பகுதிகள் மேடாகி விட்டது. மழை போதிய அளவு பெய்தாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் கண்மாய்களை தூர்வார வேண்டும்.

* புலிக்குளம் கண்மாய் பாதிப்பு:

புலிக்குளம் விவசாயி செருவலிங்கம் கூறியதாவது: புலிக்குளம் கண்மாய் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாய்கள் மோடாகி விட்டதால், கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. கண்மாய்களில் நீர் தேங்காததால், விவசாயம் செய்ய முடியாமல் பிற மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே கண்மாய்களை துார்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

/






      Dinamalar
      Follow us